ஜூலை 26 மற்றும் 27ம் தேதிகளில் இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுக்காக 1,182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலிஸ் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் போலிஸ் அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.சோதனையின் போது கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன், ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 20 முக்கிய குற்றவாளிகள் மற்றும் பிடியாணை உள்ள 410 பேரும் கைது செய்யப்பட்டனர்.மொத்தம் 24,343 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டு, 9,727 வாகனங்கள் மற்றும் 7,396 இருசக்கர வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. 8,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பங்கேற்ற இந்தச் சுற்றிவளைப்பில் நான்கு சட்டவிரோத துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.