ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வாழும் 33 வயதான இந்தியர் சவுரவ் ஆனந்த், ஜூலை 19ஆம் தேதி அல்டோனா பகுதியில் மருந்தகம் சென்றபோது, சிறுவர்கள் குழுவால் கொடூரமாக தாக்கப்பட்டார். கத்தி போன்ற ஆயுதங்களால் அவர் கை, முதுகு பகுதிகளில் காயமடைந்தார்.தாக்கியவர்கள் அவரது பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். காயமடைந்த ஆனந்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.