Offline
ஜெர்மனியில் ரயில் தவறி 3 பேர் பலி, பலர் காயம்.
By Administrator
Published on 07/29/2025 09:00
News

ஜெர்மனியின் தென் மேற்கு பகுதியில் உள்ள பாட்டன்-வூர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் ரீட்லிங்கன் அருகே, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.10 மணியளவில் பயணிகள் ரயில் தடம் தவறியதில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.சுமார் 100 பேர் பயணம் செய்த அந்த ரயிலில், இரண்டு பெட்டிகள் தடம் தவறி கவிழ்ந்தன. முதல் கட்ட தகவல்களில் நால்வர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், பின்னர் இது மூவராக திருத்தப்பட்டது.

சம்பவத்திற்கான காரணம் தற்போது விசாரணையிலுள்ளது. கடும் புயல் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 40 கிலோமீட்டர் பகுதி வரை ரயில்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலமாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இதில் பலர் தீவிர காயங்களுடன் இருப்பதாக கூறப்படுகிறது.ஜெர்மன் அதிபர் பிரிட்ரிக் மெர்ஸ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், உடனடியாக தேவையான அனைத்து உதவிகளும் செய்ய உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர்களிடம் கேட்டுள்ளார்.

Comments