வீடுகள், கழிப்பறைகள், பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய கட்டடத் திட்டங்களுக்கு விற்பனை மற்றும் சேவை வரி (SST) விலக்கு வழங்கப்படும் என துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அஹமட் மஸ்லான் அறிவித்துள்ளார்.சீமெந்து, மணல், கிராவல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் SST-இல் இருந்து விலக்கப்பட்டுள்ளன. இது மேம்பாட்டாளர்களின் சுமையை குறைத்து அடித்தள வசதிகளை முன்னேற்ற உதவுகிறது.வீடுகள், வழிபாட்டு இடங்கள், பொது பூங்காக்கள் ஆகியவை SST விலக்கு பட்டியலில் உள்ளன. RM1.5 மில்லியனுக்கு கீழ் வருமானம் பெறும் துணை ஒப்பந்ததாரர்கள் SST-இல் இருந்து விலக்கு பெறுவர்.SST அமலாக்கம் தீவிரமாக நடைபெறும் என்றும், பதிவு வரம்பை உயர்த்துவது குறித்து இப்போதைக்கு எந்தத் தீர்மானமும் இல்லை என அவர் கூறினார்.