கிளந்தானில், சுங்கத் துறையினர் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 102.178 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர். ரந்தாவ் பஞ்சாங் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பைகள் சோதனையிடப்பட்டதில், 88 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு பெண்ணிடம் மேற்கொண்ட சோதனையில் 32 பாக்கெட்டுகள், மேலும் விசாரணையின் அடிப்படையில் இரண்டு பைகளில் 60 பாக்கெட்டுகள் மீட்கப்பட்டன. மொத்தம் 180 பாக்கெட்டுகள் கொண்ட ஆறு பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேக நபர்கள் கஞ்சாவை தடையற்ற மண்டலம் வழியாக கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.