கோல திரெங்கானுவில், 52 வயதான வங்கி அதிகாரி ஒருவர், ஃபேஸ்புக்கில் பார்த்த ஆன்லைன் வாகன விளம்பரத்தை நம்பி, வாட்ஸ்அப் வழியாக விற்பனையாளருடன் தொடர்பு கொண்டார். சந்தேக நபரின் MyKad மற்றும் நிறுவன விவரங்களை நம்பிய அவர், ஜூலை 9 முதல் 21 வரை எட்டு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் RM241,700 செலுத்தினார். மேலும், சுங்கச் செலவுக்காக RM31,000 கோரப்பட்டதையடுத்து மோசடியாக உணர்ந்து, ஜூலை 27 அன்று போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.