மலேசியா மற்றும் இந்தோனேசியா இடையிலான வருடாந்திர உச்சி மாநாடு இன்று இந்தோனேஷியாவில் ஆரம்பமாகி உள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த உச்சி சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையேயான பல்துறை ஒத்துழைப்பு மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகும். இந்த சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல துறைகள் விவாதிக்கப்படும். சமூக கூட்டறிக்கை வெளியிடப்படுவதே இதில் எதிர்பார்ப்பு.