சபா பாபர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பந்தயத்துக்காக பிலிப்பைனிலிருந்து கடத்தப்பட்ட 936 சண்டைக்கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 வெளிநாட்டவர்கள் உட்பட 3 பேர் (வயது 38–59) கைது செய்யப்பட்டனர். சோதனையில் RM4.7 மில்லியன் மதிப்பிலான 30 இரும்புக் கூண்டுகள், 107 குறிச்சொல் கம்பிகள் மற்றும் பறவைகள் பயன்பாட்டுக்கான மருந்துகள், வைட்டமின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் மீது விலங்குகள் பிரிவு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 179 ரெய்ட்களில் 314 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.