மடானி கொள்கையின் கீழ், மலேசியாவின் வளர்ச்சி தார்மீக விழுமியங்கள் மற்றும் தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். கொம்ப்ளெக்ஸ் ஸ்ரீ பெர்டானாவில் நடந்த ‘மஜ்லிஸ் இல்மு மடானி’ நிகழ்வில் பேசும் அவர், முன்னேற்றம் வேகமாக நடந்தாலும், ஒழுக்கம் மற்றும் இரக்கம் முக்கியம் என்றும், இஸ்லாமிய மதிப்புகள் நாட்டின் வழிநடத்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் கூறினார்.காசா பற்றியும் அவர் உருக்கமாகக் கருத்து தெரிவித்தார். அங்கு மக்கள் காட்டும் பொறுமை, நம்பிக்கை தனக்கு பாடமாக உள்ளதெனவும், அனைத்து முஸ்லிம்களும் குர்ஆனின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார். மதனி அறிவுக் கூட்டங்கள் தொடர வேண்டும் என குர்ஆன் நிபுணர் அஹ்மத் ம'சராவி பரிந்துரைத்தார்.