இரண்டாம் நிலைப் கல்வியை கட்டாயமாக்கும் நோக்கில், கல்வி சட்டம் 1996-ல் புதிய பிரிவு 32A-ஐச் சேர்க்கும் கல்வி (திருத்த) மசோதா 2025 இன்று பாராளுமன்றத்தில் முதற்கட்ட வாசிப்புக்காக தாக்கல் செய்யப்பட்டது. இது அமைச்சருக்கு வர்த்தமானம் மூலம் கட்டாயக் கல்வி உத்தரவை வெளியிட வாய்ப்பளிக்கிறது.சட்டத்தை மீறினால், அதிகபட்சமாக RM5,000 அபராதம் அல்லது ஆறு மாத சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். விதிவிலக்கு பெற்றவர்களுக்கு இது பொருந்தாது.மேலும், தற்போது மலேசிய குடிமக்கள் குழந்தைகளுக்கே கட்டாயமாக உள்ள முதலாம் நிலைக் கல்வி உத்தரவை, மலேசியாவில் வசிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரப்பும் வகையில் பிரிவு 29A-வில் திருத்தம் செய்யப்பட உள்ளது.மசோதாவின் இரண்டாம் மற்றும் மூன்றாவது வாசிப்புகள் இதே கூட்டத்தொடரில் முடிக்கப்படவுள்ளன.