1952 ஆம் ஆண்டு விஷங்கள் சட்டம் (Act 366) தொடர்பான 2025 திருத்த மசோதா, அமலாக்க அதிகாரிகள் மற்றும் வளாகங்கள் பற்றிய வரையறைகளை விரிவாக்கும் நோக்கத்துடன், இன்று டெவான் ரக்யாத்தில் மூன்றாம் வாசிப்பில் நிறைவேற்றப்பட்டது.புதிய திருத்தத்தில், “அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி” என்ற வரையறை மேம்படுத்தப்பட்டு, இன்ஸ்பெக்டர் பதவிக்கு மேற்பட்ட போலீசார் மட்டுமன்றி, சுகாதார அமைச்சால் நியமிக்கப்படும் எந்தவொரு நபரும் இதில் அடங்குவர்.மேலும், “வளாகம்” என்ற சொல் நிலம், கட்டடங்கள், கடல் மேலான அமைப்புகள் உள்ளிட்ட நிலையான அல்லது அசைவான இடங்களையும் உள்ளடக்கிய வகையில் விரிவாக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய பிரிவு 31A ஐச் சேர்க்கும் வழியாக, எந்த நபரையும் அதிகாரபூர்வ அதிகாரியாக நியமிக்க சுகாதார அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.