Offline
தாய்லாந்து-கம்போடிய போர்நிறுத்தத்திற்கு மத்தியஸ்தராக பணியாற்ற மலேசியா தயார்
By Administrator
Published on 08/01/2025 09:00
News

தாய்லாந்து-கம்போடிய போர்நிறுத்தத்தை ஆதரிப்பதில் நடுநிலையான மத்தியஸ்தராக பணியாற்ற மலேசியா தயாராக இருப்பதாக அதன் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் டத்தோ முகமது நிஜாம் ஜாஃபர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். பதட்டமான எல்லையில் அமைதி உள்ளிட்ட ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக புதன்கிழமை தாய்லாந்திற்கு தனது அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது இந்த உறுதிமொழி தெரிவிக்கப்பட்டதாக ராயல் தாய் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் விந்தாய் சுவாரி தெரிவித்தார்.

திட்டமிடப்பட்ட கண்காணிப்புப் பணிக்கு முன்னதாக நடந்து வரும் எல்லைப் பிரச்சினை குறித்த விளக்கத்தைப் பெறுவதற்காக முகமது நிஜாம் புதன்கிழமை முதல் – இரண்டாம் இராணுவப் பிராந்தியங்களின் தளபதிகளைச் சந்தித்தார். போர்நிறுத்தத்தைக் கண்காணிக்கவும், ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு உண்மை முன்னேற்றங்களைத் தெரிவிக்கவும் ஒரு வெளிநாட்டு பாதுகாப்பு இணைப்புக் குழு (DA குழு) மற்றும் ஒரு ஆசியான் கண்காணிப்புக் குழுவை நிறுவுவதற்கான திட்டங்களையும் முகமது நிஜாம் கோடிட்டுக் காட்டினார் என்று விந்தாய் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விந்தாய் கூற்றுப் படி, முகமது நிஜாம் மூன்று முக்கிய விஷயங்களை வலியுறுத்தினார்: உடனடி போர்நிறுத்தம், துருப்புக்களை திரும்ப பெறுவது, கண்காணிப்புப் பணிக்கு வழிவகுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மருத்துவ உதவியில் கவனம் செலுத்துதல். இந்த பயணத்தின் போது, முகமது நிஜாம், பாங்காக்கில் உபோன் ரட்சதானி மாகாணத்தில் உள்ள 2ஆவது ராணுவ பிராந்தியத்தின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பூன்சின் பட்க்லாங், 1ஆவது ராணுவ பிராந்தியத்தின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அமரித் பூன்சுயா ஆகியோரைச் சந்தித்து, எல்லை நிலைமை உள்ளிட்ட சாத்தியமான தீர்வுகள் குறித்து விவாதித்தார்.

தாய்லாந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருவதாகவும், பார்வையாளர் குழுக்களை முன்னோக்கி அனுப்புவதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் வின்தாய் மலேசிய பாதுகாப்புப் படைத் தலைவரிடம் உறுதியளித்தார். மே 28 அன்று ஒரு சிறிய மோதலுடன் எல்லையில் பதட்டங்கள் தொடங்கி, ஜூலை 24 அன்று முழு அளவிலான ஆயுத மோதலாக அதிகரித்தன.

Comments