கோலாலம்பூர்:
நாடளாவியளவில் RON95 எரிபொருள் விலை இன்றிலிருந்து ஆகஸ்ட் 6 வரை மாற்றமின்றி தொடரும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, RON95 லிட்டருக்கு RM2.05, RON97 லிட்டருக்கு RM3.17 மற்றும் டீசல் RM2.91 ஆகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் தாக்கங்களைத் தணிக்க அரசாங்கம் RON95 மற்றும் டீசல் விலைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயத்தைத் தொடர்ந்து பராமரித்து வருவதாகவும், RON95-க்கு RM2.05 மற்றும் டீசலுக்கு RM3.03 என விலை கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன், உலக சந்தை நிலவரத்தின் பேரில் எதிர்கால விலை மாற்றங்களை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கவுள்ளதாகவும், மக்கள் நலனுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது.