Offline
செர்டாங் UPM அருகே பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது
By Administrator
Published on 08/03/2025 08:00
News

செர்டாங்,

யூனிவர்சிட்டி புத்ரா மலே   சியா (UPM) வில் உள்ள பெர்சியாரன் யூனிவர்சிட்டி 1 சாலையில் இன்று மதியம் 12.18 மணியளவில், பள்ளி மாணவர்களை கொண்டுசெல்லும் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியது.

 

பேருந்து, பேரில்ஸ் சாக்லேட் தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடப்புறம் வேகமாக விழுந்து ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தில் ஒரு ஆசிரியர் மற்றும் மூவர் மாணவர்கள் சிறு காயங்களுடன் செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

 

44 வயதுடைய பேருந்து ஓட்டுநர், நேராகச் செல்லும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

இந்த வழக்கு, 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 42ன் கீழ், மோசமான மற்றும் அபாயகரமான ஓட்டம் என்ற குற்றச்சாட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் RM5,000 முதல் RM15,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த விபத்து குறித்து செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகம் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அல்லது விபத்து குறித்து சாட்சி சொல்லக்கூடியவர்கள் 03-8074 2222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு போலீஸ் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

Comments