மாஸ்கோ,
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் அமைந்துள்ள கிரஷ்னெனின்கோவ் எரிமலை, 475 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குமுறத் தொடங்கியுள்ளது.
1550ஆம் ஆண்டில் கடைசியாக வெடித்துச் சிதறிய இந்த எரிமலை, நேற்று மீண்டும் சீற்றமடைந்ததை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெடித்து எழுந்த சாம்பல் 6 கிலோமீட்டர் உயரத்திற்கு பரவியது.
ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படங்களில் எரிமலை சீற்றத்தின் கடுமை வெளிப்பட்டுள்ளது. எனினும், தற்போது எந்தவிதமான உயிர் அல்லது உடமையழிவுகள் ஏற்படவில்லை என அவசரகால அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த எரிமலை சீற்றத்திற்கு, கடந்த வாரம் அந்த பகுதியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட சுனாமி எச்சரிக்கை காரணமாக இருந்திருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.