கோலாலம்பூர்,
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) நடைபெற்று வந்த ‘கவுண்டர் செட்டிங்’ மோசடியில் ஈடுபட்டதற்காக, கடந்த ஆண்டில் மட்டும் 26 அமலாக்க அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் இன்று நாடாளுமனறத்தில் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு மேலதிகமாக 8 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் MACC தேசிய நுழைவு, வெளியேறும் பதிவுகளை மறைத்து மோசடி செய்த ஒரு கும்பல் சம்பந்தப்பட்ட 50 வழக்குகளை விசாரித்து வருகிறது.
இதில், இரண்டு வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மற்றவை விசாரணை, நடவடிக்கை மற்றும் அறிக்கைகள் தயாரிப்பு நிலைகளில் உள்ளன.
“ஊழலுக்கெதிரான இந்த நடவடிக்கைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. யாராக இருந்தாலும் இவை சகிக்கமுடியாத செயல்கள். எனவே, ஊழலுக்கு எதிரான அரசின் உறுதி மற்றும் நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்படக்கூடாது” என அமைச்சர் தெரிவித்தார்.
கவுண்டர் செட்டிங் என்பது இது ஒரு வகை ஊழல் நடைமுறையாகும். அதாவது, குடிநுழைவு கவுண்டர்களை தவறாக பயன்படுத்தி, சட்டவிரோதமாக நாட்டு வெளி நுழைவு அல்லது வெளியேற்றத்தை எளிதாக்கும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது.