Offline
கோலாலம்பூரிலுள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெ.1.77 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது
By Administrator
Published on 08/05/2025 09:00
News

கோலாலம்பூர், 

தலைநகர் ஸ்ரீ ஹர்த்தாமாஸ் பகுதியிலுள்ள ஒரு வீட்டு மனைவில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) நடத்திய சிறப்பு சோதனையில், 439.7 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் கெட்டமைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து 30 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

“ஒரு மாத கால உளவு நடவடிக்கையின் பின்னர், மதியம் 2.10 மணியளவில் சோதனை நடத்தப்பட்டது. இது 2025ஆம் ஆண்டின் முக்கியமான போதைப்பொருள் வேட்டையில் ஒன்று என புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹூசைன் ஓமார் கான் இன்று தெரிவித்தார்.

அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 234 கிலோ ஷாபு அடங்கிய 224 பொட்டலங்கள் 205.7 கிலோ கெட்டமைன் அடங்கிய 200 பிளாஸ்டிக் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி 77 லட்சம் 80 ஆயிரம் (RM17.78 million) ஆகும் என கூறப்படுகிறது.

சந்தேக நபர், ஒரே நேரத்தில் போதைப்பொருள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் போக்குவரத்து முகவர் (transporter) ஆக செயல்பட்டு வந்ததாகவும், மாதம் RM6,500 – RM7,000 வரையிலான சம்பளத்தை பெற்றுவருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த வீடு, போதைப்பொருள்களை சந்தையில் விநியோகிப்பதற்கு முன் சேமிப்புக்கிடங்காக பயன்படுத்தப்பட்டதாக ஹூசைன் தெரிவித்துள்ளார்.

சோதனையின் போது, இரு கார்கள்,  மூன்று கைக்கடிகாரங்கள், வெவ்வேறு நகைகள் (மொத்தம் RM93,350) பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு RM17.9 மில்லியன் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கைதான நபர் மீது 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39(பி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைநிலையில اوரு வாரமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments