கூச்சிங்,
KPJ Kuching சிறப்பு மருத்துவமனை போர்னியோவில் முதன்முறையாக Borneoவில் பல்ஸ் ஃபீல்ட் ஆப்லேஷன் (pulse field ablation- PFA) தொழில்நுட்பத்தின் மூலம் இதய அறுவைசிகிச்சையை (heart ablation) வெற்றிகரமாக மேற்கொண்டு முக்கிய மருத்துவ சாதனையை பெற்றுள்ளது.
KPJ யின் சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதய துடிப்பு கோளாறுகள் (heart rhythm disorders) உள்ள நோயாளர்களுக்கு இந்த புதிய அணுகுமுறை அதிக துல்லியத்துடன் செயல்பட்டு, விரைவான சிகிச்சை மற்றும் சுற்றியுள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது.
“இந்த புதிய PFA தொழில்நுட்பம், இதய திசுக்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பட்ட எனர்ஜி பல்ஸ்களை வழங்கி, இதய துடிப்பை சீரமைக்க உதவுகிறது,” என KPJ சுகாதார பிரிவு தெரிவித்தது.
இக்குழு நடத்திய முதல் அறுவைசிகிச்சை, ‘அட்ரியல் ஃபிப்ரிலேஷன்’ (AFib) எனப்படும் பொதுவான இதய துடிப்பு கோளாறுடன் உள்ள ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலை சீரான இதய துடிப்பில் தடம்புரியச் செய்து, சோர்வை ஏற்படுத்தி, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
“இந்த புதிய PFA தொழில்நுட்பத்தை போர்னியோவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியதில் பெருமை கொள்கிறோம். இது, நோயாளிகளுக்கான மகிழ்ச்சியான செய்தியும் ஒரு புதுமையம் ஆகும். மேலும் இதய சிகிச்சைகளுக்கான மேம்பட்ட தீர்வுகளுக்கான நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும், இந்த வளர்ச்சி KPJ health care இன் நோக்கத்திற்கு மேலும் இசைவாக உள்ளது.” எனவும் KPJ சுகாதார பிரிவு தெரிவித்தது.
“PFA போன்று புதிய சிகிச்சைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாம் மேலும் பாதுகாப்பான, துல்லியமான சிகிச்சைகளை வழங்க முடியும். இது KPJ குழுமத்தின் மருத்துவ தரத்தை உயர்த்துவதுடன், ‘Care for Life’ என்ற பார்வைக்கு வலுவூட்டுகிறது.” என அந்த பிரிவு மேலும் தெரிவித்தது.
“இந்த தொழில்நுட்பம், வழிமாறிய இதய திசுக்களை மிகத் துல்லியமாக கையாள உதவுகிறது. சுற்றியுள்ள உடல் அமைப்புகளுக்கு ஏற்படும் சேதத்தையும் குறைக்கிறது.” என இந்த அறுவைசிகிச்சையை வழிநடத்திய KPJ Kuching இன் ஆலோசகர் இதய நிபுணர் டாக்டர் கோ கெங் டாட் கூறினார்.