Offline
நண்பரால் தள்ளப்பட்டு விழுந்து தலையில் கடுமையாக காயத்துக்குள்ளான பாலர்பள்ளி மாணவிக்கு 7 மணி நேர அறுவை சிகிச்சை
By Administrator
Published on 08/16/2025 09:00
News

ஜோகூர் பாரு:

பள்ளி நண்பரால் தள்ளப்பட்டு கீழே விழுந்ததாக நம்பப்படும் சம்பவத்தில், தலையில் கடுமையான காயம் அடைந்த பாலர்பள்ளி மாணவி, 7 மணி நேரத்துக்கும் மேலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு சுல்தானா அமீனா மருத்துவமனையில் (HSA) சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவியின் தலையில் ஏற்பட்ட இரத்தக் கசிவை குறைக்கும் நோக்கில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், ஜோகூர் மாநில மகளிர், குடும்ப மற்றும் சமூக அபிவிருத்தி குழுத் தலைவர் கைரின்-நிசா இஸ்மாயில்@முஹமட் ஆன் தெரிவித்தார்.

கடந்த திங்கள்கிழமை மாலை சுமார் 6.45 மணியளவில், பிறந்தநாள் விழா ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த தனது தாயுடன் இருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. பள்ளி மேடை அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மாணவி தரையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

விழுந்தபோது வெளிப்படையான காயங்கள் எதுவும் அவருக்கு ஏற்பட்டதாக தெரியவில்லை. எனினும், இரவு சுமார் 2 மணியளவில் மாணவி மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டார். அதனைத்தொடர்ந்து, உடனடியாக மெர்சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது, தலையில் எலும்பு முறிவு மற்றும் இரத்தக் கசிவு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த சிறுமி விரைவில் முழுமையாக குணமடையவும், இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள குடும்பத்தினருக்கு மன வலிமை கிடைக்க, அனைவரும் பிரார்த்திப்போம்,” என்று, அவர் சொன்னார்.

Comments