கோலாலம்பூர்:
தேசியத் தலைவர்கள், மேலும் விஐபி-களுக்குப் (VVIPs) பாதுகாப்பு அளிக்கும் அனைத்து அதிகாரிகளும், விரைவில், சிறப்புப் பாதுகாப்புப் பயிற்சி வகுப்பில், பங்கேற்க வேண்டும் என்று, காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் (Datuk Seri Mohd Khalid Ismail) அறிவித்துள்ளார்.
பேராக் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது, பின் ஒருவர் சுல்தான் நஸ்ரின் ஷாவை (Sultan Nazrin Shah) நெருங்க முயன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பயிற்சியில், சிறப்பு அதிரடிப் படை, (Special Action Unit) கமாண்டோக்களின் (commandos) தனிப்பட்ட பாதுகாப்பு நுட்பங்களும் சேர்க்கப்படும்.
இதற்கிடையில், பேராக்கில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்குமுறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட 41 வயதுப் பெண்ணுக்கு, போதைப்பொருள் குற்றப் பதிவுகள், மனநலச் சிகிச்சை வரலாறு இருப்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண், கொலை முயற்சிக்காக குற்றவியல் சட்டம் பிரிவு 325, பிரிவு 511-இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்.