Offline
மலேசியா வருகை 2026: 47 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளது!
By Administrator
Published on 09/04/2025 09:00
News

கோலாலம்பூர்:

“மலேசியா வருகை ஆண்டு 2026” (Visit Malaysia 2026 – VM2026) என்ற திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 43 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகளையும், 2026-ஆம் ஆண்டிற்குள் 47 மில்லியன் பயணிகளையும், மலேசியா ஈர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது என, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி (Datuk Seri Ahmad Zahid Hamidi) அறிவித்துள்ளார்.

வலுவான வர்த்தக முத்திரை, துரித சந்தைப்படுத்துதல், விமான நிறுவனங்கள், பயண நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு சுற்றுச்சூழல் சுற்றுலா, ஷாப்பிங், பிற சுற்றுலாத் தலங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த இலக்கை அடைய முடியும் என்று அவர் கூறினார்.

2024-ஆம் ஆண்டில், மலேசியாவுக்கு, 38 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகளும், 260 மில்லியன் உள்நாட்டுப் பயணிகளும் வருகை தந்தனர்.

இதன் மூலம், நாட்டின் சுற்றுலாத் துறை, முழுமையாக மீண்டுள்ளது என்று ஸாஹிட் கூறினார். மேலும், மத்திய கிழக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக, “மலேசியா மிட்நைட் சேல்” (Malaysia Midnight Sale) போன்ற பருவகாலப் பயணத் திட்டங்களும், விளம்பரங்களும் முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவை, ஒரு உலகத் தரம் வாய்ந்த, போட்டித்திறன் கொண்ட, வளமான சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கு, நாடு தழுவிய ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Comments