Offline
Menu
மைடின் கடைகளின் நேரம் நீட்டிப்பு: வாடிக்கையாளர்கள் நெரிசலின்றி பொருட்களை வாங்கலாம்!
By Administrator
Published on 09/05/2025 09:00
News

கோலாலம்பூர்:

மைடின் (Mydin) தனது 50 கிளைகளின் செயல்பாட்டு நேரத்தை, செப்டம்பர் 5 முதல் ஏழாம் தேதி வரை, காலை 7 மணி முதல் அதிகாலை 1 மணி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

அரசின் உதவியைப் பயன்படுத்திக்கொள்ள, வாடிக்கையாளர்களுக்கு, அதிக நேரம் கிடைப்பதற்கும், நெரிசலைத் தவிர்க்கவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி, மைக்காசெ (MyKasih) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால், முக்கியப் பேரங்காடிகளில், RM100 சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (Sumbangan Asas Rahmah) உதவியைப் பெறுவதில், வாடிக்கையாளர்களுக்கு தாமதம் ஏற்பட்டது.

இதைச் சரிசெய்ய, நிதி அமைச்சு, நிமிடத்திற்கு 15,000 பரிவர்த்தனைகளைக் கையாளும் வகையில், அமைப்பை மேம்படுத்தியுள்ளது.

Comments