காஜாங்:
செராஸ், பத்து 9-இல் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த ஆறு வயதுச் சிறுவன், நாயால் கடிக்கப்பட்ட சம்பவத்தை, காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 3-ஆம் தேதி, நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில்,தலையில் காயமடைந்த சம்பந்தப்பட்ட சிறுவன், காஜாங் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில், தற்போது, நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே சிறுவனை கடித்த நாய், பதிவு செய்யப்பட்ட செல்லப் பிராணியா இல்லையா என்பது குறித்து, மேலதிக விசாரணைக்காக, அதனை காஜாங் நகரான்மை கழகம் (MPKj) பிடித்துச் சென்றது.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 289, 1953-ஆம் ஆண்டு விலங்குகள் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ், விசாரிக்கப்படுகிறது.
எனவேதான், நாய்களின் உரிமையாளர்கள், ஊராட்சி மன்றங்களின் விதிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் செல்லப் பிராணிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.