Offline
உலகம் ஒருபோதும் காட்டாட்சிக்கு திரும்பி விடக்கூடாது: டிரம்பை விமர்சித்த சீன அதிபர்
By Administrator
Published on 09/05/2025 09:00
News

‘ உலகம் ஒருபோதும் காட்டாட்சிக்கு திரும்பி விடக்கூடாது’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, சீன அதிபர் ஜி ஜின்பிங் மறைமுகமாக சாடியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை தோற்கடித்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணி வகுப்புக்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தலைமை தாங்கினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வட கொரியாவின் கிம் ஜாங் உன் உட்பட 26 நாட்டுத் தலைவர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது:

வலிமையானவர்கள், பலவீனமானவர்களை வேட்டையாடும் காட்டாட்சிக்கு உலகம் ஒருபோதும் மீண்டும் திரும்பி விடக் கூடாது. சீனாவின் வளர்ச்சியை எவரும் தடுக்க முடியாது. அச்சுறுத்தவும் முடியாது. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.

Comments