சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட மலேசியர்களின் மரணதண்டனையை நிறுத்த இரண்டு முந்தைய பிரதமர்கள் மேற்கொண்ட முயற்சிகளை மனித உரிமை வழக்கறிஞர் பாராட்டினார். துன் (டாக்டர்) மகாதீ (முகமது), இஸ்மாயில் சப்ரி (சிங்கப்பூர் அரசாங்கத்திடம்) மேல்முறையீடு செய்தனர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான என். சுரேந்திரன் கூறினார்.
2018 ஆம் ஆண்டில், பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவி வகித்தபோது, பி. பிரபுவின் மரணதண்டனையை நிறுத்தி வைக்குமாறு மகாதீர் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும், பிரபு தூக்கிலிடப்பட்டார். ஒரு வருடம் கழித்து, அப்போதைய சட்ட அமைச்சர் லியூ வுய் கியோங் சிங்கப்பூருக்கு கடிதம் எழுதினார். அவர் தற்போது சிங்கப்பூரில் மரண தண்டனையில் இருந்த பி. பன்னீர் செல்வத்திற்கு கருணை காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
2021 ஆம் ஆண்டில், இஸ்மாயில் தனது சக பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடிதம் எழுதி, “மனிதாபிமான அடிப்படையில்” நாகேந்திரனுக்கு கருணை காட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், அடுத்த ஆண்டு நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டார்.
லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டியின் ஆலோசகரான சுரேந்திரன், மகாதீர், இஸ்மாயில் செய்த மேல்முறையீடுகள் “அர்த்தமுள்ளவை” என்று விவரித்தார். இது குடும்பங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் அந்தக் குடும்பங்களுடன் தொடர்பில் இருந்ததால் அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அரசாங்கம், பிரதமர்கள், அவர்களுக்காகப் பேசுவது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலாக இருந்தது என்று அவர் கூறினார். தனது கட்சிக்காரரான கே. தட்சிணாமூர்த்திக்காக கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் உயர் ஸ்தானிகராலயம் முன் மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சுரேந்திரனும் ஒருவர்.
44.96 கிராம் டயமார்பைனை சிங்கப்பூருக்கு கடத்தியதற்காக தட்சிணாமூர்த்திக்கு நாளை சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவர் 2011 இல் கைது செய்யப்பட்டு 2015 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2022 இல் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அவரது மரண தண்டனை தொடர்பாக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு எதிரான சட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு மலேசியர்களில் இவரும் ஒருவர், இந்த மாத தொடக்கத்தில் மலேசிய மனித உரிமைகள் ஆணையம் அவர்களின் மரண தண்டனையில் தலையிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. மற்றவர்கள் பன்னீர் செல்வம், எஸ் சாமிநாதன், ஆர் லிங்கேஸ்வரன் ஆகிய மூவர்.