Offline
Menu
திரெங்கானு: லோரி ஓட்டிய 16 வயதுச் சிறுவன் கைது!
By Administrator
Published on 09/26/2025 09:00
News

கோல திரெங்கானு:

ஜாலான் டோக் அடிஸ்-செண்டெரிங்’ (*Jalan Tok Adis-Cendering*) சாலையில் நேற்று நள்ளிரவு நடந்த ஒரு நடவடிக்கையின் போது தேங்காய் ஓடுகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரியை ஓட்டிய 16 வயதுச் சிறுவனை, சாலைப் போக்குவரத்துத் இலக்கா JPJ தடுத்து வைத்தது.

இதன் மூலம் வணிக உரிமையாளர்கள் இளம் வயது ஓட்டுநர்களை பணியமர்த்தும் ஆபத்தான போக்கு, அம்பலமானது.

இந்தச் சிறுவன் தனது மற்றொரு இளம் வயது உதவியாளருடன் செலவுகளைக், குறைப்பதற்காக, பணியமர்த்தப்பட்டிருக்கலாம் என்று, நம்பப்படுகிறது.

இது, சாலைப் பயணிகளுக்கு தீவிர அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று மாநில `ஜே.பி.ஜே.’ இயக்குநர், ஸம்ரி சாமியோன் கூறினார்.

எனவே தான் சிறுவன் ஓட்டி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவ்வாறான குற்றங்களுக்கு எதிராக JPJ வின் அமலாக்க நடவடிக்கைகள் கடுமையாக, இருக்கும் என்றும், ஸம்ரி, வலியுறுத்தினார்.

செப்டம்பர் 1 முதல் 24 வரை, `ஜே.பி.ஜே.’, மாநிலம், முழுவதும், 5,300-க்கும் மேற்பட்ட, வாகனங்களை, ஆய்வு, செய்தது.

காலாவதியான, உரிமங்கள், காப்பீடு, அதிகப்படியான, சுமை, போக்குவரத்து, விளக்கு, விதிமீறல்கள், போன்ற, குற்றங்களுக்காக, 600-க்கும் மேற்பட்ட, வாகனங்கள் மீது, நடவடிக்கை, எடுக்கப்பட்டுள்ளது.

Comments