கோத்தா திங்கி:
செனாய் – டெசாரு நெடுஞ்சாலையின் 56ஆவது கிலோ மீட்டரில் இன்று மூன்று வாகனங்களை உட்படுத்திய சிக்கியவர்களுள் மேலும் ஒருவர் மாண்டார்.
முன்னதாக இந்த விபத்தில் இருவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்ட நிலையில் மேலும் ஒருவர் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசோப் ஒஸ்மான் தெரிவித்தார்.
உயிரிழந்த மூவரும் Volkswagen காரில் பயணித்தவர்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த விபத்தில் Toyota Fortuner ரக வாகனத்தில் கடத்தல் சிகிரெட்டுகள் கொண்டு வரப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அந்த விவகாரம் குறித்து மாவட்ட போலீஸ் தரப்பின் குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.