Offline
Menu
தீபாவளி சமயத்தில் 2.67 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணம்!
By Administrator
Published on 10/12/2025 16:39
News

கோலாலம்பூர்:

இம்மாதம் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் அச்சமயத்தில் நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில் சுமார் 2.67 மில்லியன் வாகனங்கள் பயணிக்கக்கூடும் என்று எல்எல்எம் எனப்படும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பிளஸ் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் மட்டும் சுமார் 2.2 மில்லியன் வாகனங்கள் பயணிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதே சமயம் கோலாலம்பீர் – காராக் நெடுஞ்சாலையில் 170,000 வாகனங்களும் முதல் கட்ட கிழக்கு கரை நெடுஞ்சாலையில் 90,000 வாகனங்களும் இரண்டாம் கட்ட கிழக்கு கரை நெடுஞ்சாலையில் 40,000 வாகனங்களும் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையில் 170,000 வாகனங்கள் பயணிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக முதன்மை நெடுஞ்சாலைகளில் வரும் 16ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கியே வாகன நெரிசல்கள் ஏற்படலாம் எனவும் கருதப்படுகின்றது.

எனவே பயனர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ள 29 இடங்களில் “smart lane” செயல்ப்படுத்துவது, 17ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரையில் வழிகள் மூடப்படாது உள்ளிட்ட நடவடிக்கைகளை சாலை மேலான்மை நிறுவனங்கள் முன்னெடுக்கும்படி எல்எல்எம் அறிவுறித்தியுள்ளது.

Comments