Offline
Menu
பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம்: 5 பேர் பலி
By Administrator
Published on 10/20/2025 08:38
News

மணிலா,தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இந்நிலையில், பிலிப்பைன்சை பெங்சன் என்ற புயல் தாக்கியது. புயல் காரணமாக அந்நாட்டின் லுசன், மிண்டனோ ஆகிய தீவுகள், கியூசன் மாகாணம், பிடகோ நகரம் போன்ற பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. மேலும், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டை தாக்கிய புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மாயமாகினர். பல்வேறு பகுதிகளில் சாலை, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மீட்பு பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.

Comments