Offline
Menu
சுபாங் ஜெயா போலீஸ் சார்ஜென்ட் ஒருவரை புதன்கிழமை முதல் காணவில்லை
By Administrator
Published on 10/20/2025 08:58
News

சுபாங் ஜெயா:

சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போலீஸ் தங்கிம் விடுதியைவிட்டு கடந்த புதன்கிழமை வெளியேறியதில் இருந்து ஒரு போலீஸ் சார்ஜென்ட் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முகமட் ஃபாடில் முகமட் @ அஹாதியா என்ற அந்த ஆடவர், WC8024K என்ற பதிவு எண்ணைக் கொண்ட கருப்பு புரோட்டான் சாகாவில் தனது குடியிருப்புப் பகுதியை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது என்று மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.

40 வயதான ஃபாடில் 167 செ.மீ உயரம், 85 கிலோ எடை, பழுப்பு நிற தோல், குட்டையான முடி, அகன்ற மூக்கு மற்றும் அடர்த்தியான உதடுகள் கொண்டவர் என்று அவர் கூறினார்.

அவரது இருப்பிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது மாவட்ட போலீஸ் தலைமையக செயல்பாட்டு அறையையோ 03-78627222/03-78627100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விசாரணை அதிகாரி சார்ஜென்ட் முகமட் சுஹைமி இப்ராஹிமை 019-8301476 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments