Offline
Menu
மரம் சரிந்து வாகனத்தின் மேல் விழுந்ததில் ஆடவர் மரணம்
By Administrator
Published on 10/23/2025 03:12
News

கோலாலம்பூர்:

இன்று மாலை பெய்த அடை மழை, புயல் காற்றின் காரணமாக சரிந்த மரம் அவ்வழியே சென்ற காரின் மேல் விழுந்ததால் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

முன்னதாக கோலாலம்பூர் பகுதியில் மரங்கள் விழுந்ததாக அவசர அழைப்புகள் வந்ததாக தலைநகர் தீயணைப்பு – மீட்புபடை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிலு சரிந்த மரக்கிளைகள் சில வாகனங்களை மோதின. இதனையடுத்து மீட்பு படையின் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பெர்சியாரான் டூத்தாமாசில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 40 வயதுமிக்க ஆடவர் உயிரிழந்தார். அதே சமயம் கெப்போங், ஜாலான் மெட்ரோ பிரிமாவில் நிகழ்ந்த சம்பவத்தில் ஒரு பெண் காயமடைந்தார் என்றும் அவ்வறிக்கையில் தகவல் உள்ளது.

Comments