Offline
Menu
நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து 31 பேர் பலி
By Administrator
Published on 10/25/2025 08:30
News

அபுஜா,நைஜீரியாவின் நைஜர் மாகாணம் பீடாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று அகே நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் அந்த டேங்கர் லாரி எசான் அருகே சென்றபோது பள்ளத்தில் விழுந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எசான் சுற்றுவட்டார பகுதி மக்கள் விபத்திற்குள்ளான பகுதிக்கு பாத்திரங்களை எடுத்து கொண்டு வந்தனர்.

பின்னர் டேங்கர் லாரியில் இருந்து சாலையில் ஆறாக ஓடிய எண்ணெயை சேகரித்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் எண்ணெய் சேகரித்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் உள்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Comments