Offline
Menu
மலையில் படப்பிடிப்பு…100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த கதாநாயகி
By Administrator
Published on 11/06/2025 14:53
Entertainment

சென்னை,சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகள் படத்தின் படப்பிடிப்பின்போது நடக்கும். அகரா படப்பிடிப்பின்போது இதுபோன்ற ஒரு விபத்து நடந்தது. எம்.பி. நக்கீரன் மற்றும் லிபியா ஸ்ரீ நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் பாலக்காட்டின் அட்டப்பாடி பகுதிகளில் நடந்து வருகிறது.

ஒரு காட்சியை படமாக்கும்போது, நாயகனும் நாயகியும் பள்ளத்தாக்கில் தவறி விழுந்தனர். இயக்குளர் இதை வெளிப்படுத்தினார்.

இயக்குனர் ஜீவ பாரதி கூறுகையில், ‘கேரளாவின் அட்டப்பாடி மலைப்பகுதியில் கதாநாயகனும் கதாநாயகியும் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். ஒன்றாக நின்று பேசிக்கொண்டிருக்கும் காட்சியை படமாக்கும்போது, லிபியா ஸ்ரீ தவறி 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில், நக்கீரனும் விழுந்தார். நாங்கள் ஒரு நீண்ட கயிற்றைக் கொண்டு அவர்களை மேலே கொண்டு வந்தோம்.

அவர்கள் விழுந்த பகுதி புல்லால் மூடப்பட்டிருந்ததால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் சிறிய காயங்களுடன் தப்பினர். முதலுதவி பெற்ற பிறகு லிபியா ஸ்ரீ மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றார்’ என்றார்.

அகரா படத்தை எம்பிஎன் மூவிஸ் நிறுவனம் சார்பில் எம்.பி.நக்கீரன் தயாரிக்கிறார். கதை, வசனம். வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் ஆகியவற்றை ஜீவ பாரதி கையாளுகிறார். நிஷாந்த ஜீவா பாரதி, கோவை டாக்டர் கே.கண்ணன், ரங்கராஜன் சுப்பையா, செந்தில் தங்கவேல், ரமேஷ் ராஜா, ஆர்.பிரபு, ஜி.கணேஷ்குமார், செந்தில் குமார் மற்றும் இனியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Comments