சென்னை,தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றால் கண்டிப்பாக அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். படத்தின் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே, அப்படத்தின் ஒவ்வொரு உரிமைகளும் விற்பனை ஆகிவரும்.
அந்தவகையில் விஜய் நடிப்பில் அடுத்தாண்டு (2026) பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் என்று சொல்லப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
அந்தவகையில் ‘ஜனநாயகன்’ படத்தின் திரை வெளியீட்டுக்கு முன்பான வியாபாரம் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக படத்தின் ஓ.டி.டி. உரிமை மட்டும் ரூ.110 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது.
அதேபோல தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை ரூ.115 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.35 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் படம் ரிலீசுக்கு முன்பாகவே இதுவரை ரூ.260 கோடிக்கு வியாபாரம் நடந்திருக்கிறது. மேலும் ‘ஜனநாயகன்’ படத்தின் வட அமெரிக்கா உரிமையை ரூ.24 கோடிக்கு வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.