கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்க இருந்தார். மூவரும் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் தொடக்கம் குறித்து ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவித்தது.
ஆனால் சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். எதிர்பாராத காரணங்களால் விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார். சுந்தர் சி சொன்ன ஹாரர் ஜானர் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அண்மையில் செய்தியார்களிடம் பேசிய கமல் ஹாசன், ‘அவரின் நிலைப்பாட்டை அவர் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகைகளில் பார்த்தோம். நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்தார் போல் கதை இருக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்’ என்றார்.
இந்த சூழலில் தான் ரஜினியின் 173 வது படத்தை தனுஷ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுடன் கடந்த வருடம் விவாகரத்து பெற்று தனுஷ் பிரிந்தார். இருப்பினும் மகன்களுக்காக மனைவியுடன் நல்லிணக்கத்துடன் தனுஷ் பொது இடங்களில் காணப்படுகிறார்.
மேலும் பவர் பாண்டி மூலம் இயக்குனராக தன்னை நிலை நிறுத்திய தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ராயன், இட்லி கடை உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக வெளியான இட்லி கடை வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் ரஜினியின் மாஸ் பிம்பத்துக்கு நியாயம் செய்யும் வகையில் தனுஷ், கதையை உருவாக்குவாரா அல்லது எதார்த்தமான கதையில் அவரை நடிக்க வைக்கப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. அதேநேரம் தனுஷ்க்காக சுந்தர் சி கதையை ரஜினி நிராகரித்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.