மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்த்து வரும் நடிகராக உள்ளார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான ‘டைஸ் ஐரே’ என்ற பேய் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மோகன்லால் தனது மகள் விஸ்மயா-வை மோகன்லால் சினிமாவில் களம் இறக்கி உள்ளார்.
மோகன்லால் நடத்தும் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தனது 25 வது ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி இந்த அறிவிப்பு வந்தது.
விஸ்மயா நடிக்கும் முதல் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். இப்படத்திற்கு, ‘துடக்கம்’ எனப் பெயரிடப்பட்டது.
இதையும் படியுங்கள்: ல்தகா சைஆ.. மீண்டும் திரைக்கு வரும் ‘ப்ரண்ட்ஸ்’ புதிய டிரெய்லர் வெளியீடு
இந்த படத்தில் மோகன்லாலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல பின்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இடுக்கியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.