Offline
Menu
வாகனப் பரிசோதனை முன்பதிவுக் கட்டணம் RM5-ஆக உயர்வு; புஸ்பாகோம் அறிவிப்பு!
By Administrator
Published on 01/04/2026 14:15
News

ஷா ஆலம்:

புஸ்பாகோம் (Puspakom Sdn Bhd) நிறுவனம், வாகனப் பரிசோதனைக்கான முன்பதிவுச் செயலாக்கக் கட்டணத்தை (Booking Fee) தற்போதைய RM3.50-லிருந்து RM5-ஆக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றமானது வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4, 2026) முதல் அமலுக்கு வருகிறது.

புஸ்பாகோம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கட்டண உயர்வுக்கான முக்கிய காரணங்களைக் குறிப்பிட்டுள்ளது: அதில், தற்போதைய முன்பதிவு முறையை விட மிகவும் நிலையான, வெளிப்படையான மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எளிமையான ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்த இந்த மாற்றம் அவசியமாகிறது.

இந்தப் புதிய முறையானது சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) mySIKAP இணையதளத்துடன் தானாகவே இணைக்கப்படும். இதன் மூலம் தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்படும்.

இதுமட்டுமின்றி முன்பதிவை ரத்து செய்யும் போது, செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறும் (Refund) நடைமுறை இனி மிகவும் எளிமையாகவும் முறையாகவும் மாற்றப்படும்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆன்லைன் முன்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இதுவரை இந்தக் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments