Offline
Menu
ஷா ஆலம் மருத்துவமனையில் கணவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய பெண் மாயம்
By Administrator
Published on 01/06/2026 09:00
News

ஷா ஆலம்:

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஷா ஆலம் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 41 வயது பெண் ஒருவரைக் காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவரைத் தேடுவதற்குப் காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது என்று, மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ரம்சே எம்போல் (Ramsay Embol) கூறுகையில், அந்தப் பெண்ணின் தங்கை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.06 மணியளவில் இது குறித்துப் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

காணாமல் போனவர் 41 வயதான நூர் நஸ்லா அப்துல் ஹலீம் (Nurul Nazla Abdul Halim) எனக் கூறப்படுகிறது.

அவர் கடைசியாகக் காணப்பட்ட இடம் ஷா ஆலம் மருத்துவமனை என்றும், ஜனவரி 2 (வெள்ளிக்கிழமை) மதியம் 2:00 மணிக்கு அப்பகுதியில் இதுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது)

முதற்கட்ட விசாரணையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரைச் சந்தித்துவிட்டு மதியம் 2 மணிக்கு வெளியேறியது தெரியவந்துள்ளது. அன்று மாலை 3 மணியளவில் அவர் தனது கணவருக்கு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் கடைசியாகத் தகவல் அனுப்பியுள்ளார். அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

காணாமல்போனவர் சுமார் 165 செ.மீ உயரமுடையவர் என்றும் சுமார் 92 கிலோ எடை கொண்டவர், மாநிறம் (Fair complexion) மற்றும் முக்காடு (Headscarf) அணிந்திருந்தார் என்ரும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் இஸ்மான் முகமது இத்ருஸ் (Inspector Izzman Mohd Idrus) என்பவரை 013-400 3355 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என ரம்சே எம்போல் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments