Offline
Menu
ஜல்லிக்கட்டு 2026: தமிழகத்தில் களைகட்டும் காளைத் தழுவுதல்
By Administrator
Published on 01/07/2026 08:00
Sports

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் கார், பைக் மற்றும் தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

அரசு விதித்துள்ள கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியே போட்டிகள் நடத்தப்படுகின்றன. கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் காளைகளைப் பரிசோதனை செய்த பின்னரே வாடிவாசலுக்குள் அனுமதிக்கின்றனர்.

அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பாரம்பரிய விளையாட்டைப் பார்க்க வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

Comments