சமூக ஊடகங்களில் பரவிய சில புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றிப் புகாரளிக்கத் தனியான தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக முக்கியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் விரிவான தகவல்கள் வெளியிடப்படும்.