பினாங்கு தண்ணீர் மலைக் கோவிலுக்குச் செல்வதில் சிரமம் உள்ளவர்களுக்கு உதவ மாநில அரசு இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது. மலையடிவாரத்தில் இருந்து குறிப்பிட்ட நேர இடைவெளியில் பேருந்துகள் இயங்கும்.
திருப்பணி வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, தைப்பூசத் திருவிழாவிற்குப் பினாங்கு தயாராக உள்ளது. பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.