கோலா தெரெங்கானுவில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில், காரை ஓட்டி வந்த நபர் நீண்ட நாட்களாக மனநல சிகிச்சை பெற்று வருவது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மருத்துவ ஆவணங்களைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
விபத்து நடந்த போது ஓட்டுநர் சுயநினைவின்றி இருந்தாரா அல்லது மருந்துகளின் தாக்கத்தில் இருந்தாரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெறுகிறது. இந்த விபத்து மலேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு லட்சம் ரிங்கிட் காப்பீட்டுத் தொகையை வழங்க முன்வந்துள்ளது. சாலைப் பாதுகாப்பில் மனநலன் சார்ந்த பரிசோதனைகளும் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.