அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா நாட்டின் அரசியல் விவகாரத்தில் அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார். வெனிசுலா அதிபர் மதுரோவுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப், 15 நிமிடங்களுக்குள் பதவி விலக வேண்டும் அல்லது கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்தப் போக்கு சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்து அமெரிக்கா இத்தகைய அழுத்தங்களைச் செயல்படுத்துவதாக மதுரோ தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. அதே சமயம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டவே அமெரிக்கா தலையிடுவதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ஈரான் விவகாரத்திலும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஈரானுடன் சீனா மற்றும் ரஷ்யா கைகோர்த்துள்ளதால், இப்பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ட்ரம்ப்பின் இந்த அடுத்தடுத்த அதிரடிகள் உலக நாடுகளிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.