மலேசியாவில் இன்று முதல் மின்னணு கழிவுகளை (E-Waste) இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முழுமையான தடை விதித்துள்ளது. இதுவரை நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டு வந்த இந்த இறக்குமதி, இனி எவ்வித விதிவிலக்குகளும் இன்றி 'முழுமையான தடை' (Absolute Prohibition) என்ற பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றுப்புறச் சூழல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு உறுதி செய்யப்பட்டது. துறைமுகங்கள் மற்றும் நாட்டின் நுழைவு வாயில்களில் சட்டவிரோத கழிவு இறக்குமதியைத் தடுக்க அனைத்து அமலாக்கத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மலேசியா மற்ற நாடுகளின் கழிவுகளைக் கொட்டும் இடமாக மாறுவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.