தளபதி விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக நடிக்கும் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' (Thalapathy 69) ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு இன்று விளக்கம் கிடைத்துள்ளது. இப்படம் இன்று (பிப்ரவரி 5) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை வாரியத்தில் (CBFC) நிலவும் சில சட்டச் சிக்கல்கள் காரணமாக படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போயுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இப்படம் பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 26-க்குள் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், தணிக்கைக் குழுவின் இறுதிக்கட்ட அனுமதியைப் பெற்றவுடன் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.