கோலாலம்பூர்:
மலேசியாவில் காசநோய் (TB) பாதிப்பு அதிகரித்து வருவதால், தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை, ஆனால் பொதுமக்களின் நலன் கருதி பின்வரும் சூழல்களில் அதை அணியுமாறு சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கிறது:
• உங்களுக்கு காய்ச்சல், இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால்.
• மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள் அல்லது காற்றோட்டம் குறைவாக உள்ள மூடிய அறைகளில் இருக்கும்போது.
• மருத்துவமனைகள் அல்லது கிளினிக்குகளுக்குச் செல்லும்போது.
• முதியவர்கள், நாள்பட்ட நோய் உள்ளவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுடன் பழகும்போது.
இந்த நிலையில் காசநோய் (TB) பாதிப்பு நிலவரம் தொடர்பில்
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அமாட் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி,
கடந்த ஆண்டு 100,000 பேருக்கு 8.4 ஆக இருந்த பாதிப்பு விகிதம், இந்த ஆண்டு 9.2 ஆக உயர்ந்துள்ளது.
பதிவான மொத்த வழக்குகளில் 85% மலேசியர்கள், 15% வெளிநாட்டினர்.
நெருக்கடியான வாழ்விடங்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற சமூக-பொருளாதார காரணிகள் காசநோய் பரவலுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அமைச்சகத்தின் தீவிர பரிசோதனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறையினால் அதிகப்படியான வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.