Offline
Menu
கலையை தணிக்கை செய்ய “ஜனநாயக அரசு”க்கு உரிமை இருக்க கூடாது – கமல்ஹாசன்
By Administrator
Published on 03/23/2026 14:00
Entertainment

சென்சார் போர்டுக்கும் சில இயக்குநர்களுக்கு, அவர்களது படம் தொடர்பாக முரண் வருவது அவ்வப்போது அரங்கேறி வரும். ஆனால் விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் அது பூதாகரமாகி விட்டது. தொடர்ந்து சில காரணங்களால் படத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதைத் தவிர்த்து சமீப காலங்களில் கடவுளின் பெயர்களை கொண்ட படங்களுக்கு தொடர்ந்து மாற்றம் செய்ய வலியுறுத்துகிறது. இதற்கு மலையாளப்படமான ‘ஜானகி வி vs ஸ்டேட் ஆப் கேரளா’, வரலட்சுமி சரத்குமார் படமான ‘எஸ்.சரஸ்வதி’ ஆகிய படங்கள் எடுத்துக்காட்டாக உள்ளது.

திரைப்படங்களின் தன்மையை பொறுத்து அதற்கான சான்றிதழ் தரும் CBFC அமைப்பை, சென்சார் அல்லது தணிக்கை வாரியம் எனக் குறிப்பிடும் வழக்கம் இன்று வரை தொடர்கிறது. ஆனால் The Central Board of Film Censors என்று இருந்த பெயர் 1983லேயே Central Board of Film Certification என மாற்றப்பட்டுவிட்டது என்பதை முன்வைத்து தணிக்கை என்ற சொல்லை தவிர்க்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார் கமல்.

இது தொடர்பாக நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் கூறியதாவது, “ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்குப் பின் சென்சார் என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். சென்ட்ரல் போர்ட் ஆப் பிலிம் செர்டிபிகேஷன்(Central board of film certification). சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Comments