Offline
Menu
இடுகாட்டில் ஆபாசச் செயல்: ஜோடி மீது போலீசார் விசாரணை
By Administrator
Published on 03/24/2026 14:00
News

இடுகாடு ஒன்றில் நிர்வாணமான நிலையில் ஆபாசச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அவர்கள் மீது போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பினாங்கு மாநிலப் போலீஸ் தலைமை அதிகாரி டத்தோ அசிஸி இஸ்மாயில் கூறுகையில், “இந்தக் காணொளி பினாங்கில் உள்ள ஒரு மயானத்தில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இது சமீபத்தில் நடந்ததா அல்லது பழைய வீடியோவா என்பது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்,” எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கு பிரிவு 294 (தண்டனைச் சட்டம்): பொது இடத்தில் ஆபாசமாக நடத்தல் மற்றும் பொது இடையூறு விளைவித்தல்ம், பிரிவு 509 (தண்டனைச் சட்டம்): பாலியல் துன்புறுத்தல் மற்றும் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிக்கும் வகையில் சைகை செய்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

சுமார் 38 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஒரு நபர் நிர்வாணமாக முதுகைக் காட்டியபடி நிற்கிறார். அரை நிர்வாண நிலையில் ஒரு பெண் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்திருக்கிறார். அந்த வீடியோவைப் பதிவு செய்த பெண்மணி, “இதற்கு முன்பும் நீங்கள் இங்கு இவ்வாறு செய்ததை பார்த்திருக்கிறோம்” என்று கூறி அவர்களைக் கடிந்துகொள்கிறார்.

இடுகாடு ன்பது இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் புனிதமான இடம் என்பதை அந்தப் பெண்மணி அவர்களுக்கு நினைவூட்டுகிறார். சம்பந்தப்பட்ட நபர் மன்னிப்புக் கோரிய போதிலும், அந்தப் பெண் அதனை ஏற்க மறுத்து போலீசில் புகார் அளிக்கப் போவதாக எச்சரிப்பதோடு அந்த வீடியோ முடிகிறது.

Comments