Offline
Menu
தமிழ்நாடு தேர்தலை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
By Administrator
Published on 04/13/2026 15:00
News

புதுடெல்லி, தமிழக சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில தீவிரமாக களம் இறங்கி உள்ளன. தமிழகம் முழுவதும் 4023 பேர் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் தான், ‘தமிழகத்தில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. இது அரசியல் சாசனத்துக்கு மட்டுமின்றி தேர்தல் நடத்தை விதிகளுக்கும் எதிரானது. இதனால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று மதுரை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது. மக்களை ஏமாற்றம் வகையில் இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது.

வெள்ளி கொலுசு, குத்துவிளக்கு, நகை, பணம், பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்டவை வாக்காளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது அரசியல் சசான விதிகளுக்கு மட்டுமின்றி, தேர்தல் நடத்தை விதிகளுக்கும் எதிரானது. இதனால், தமிழக சட்டசபை தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கே நேரடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழ்நாடு சட்டசபை தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. இப்படியான சூழலில் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மனு எப்போது விசாரணைக்கு வரும்? இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டாலும் கூட தேர்தல் ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Comments