Offline
Menu
விஜய்யின் ரசிகர் பலம் பிரமிக்க வைக்கிறது – நடிகை கௌசல்யா
By Administrator
Published on 04/13/2026 19:00
Entertainment

தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கௌசல்யா. காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தைப்போல, மனதை திருடிவிட்டாய் என்று அவர் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது கவுசல்யாவுக்கு 38 வயது ஆகிறது. அக்காள், அண்ணி, அம்மா வேடங்களில் நடித்துவருகிறார். கௌசல்யா பெங்களூருவை சேர்ந்தவர். கவுசல்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில், நடிகை கௌசல்யா பேட்டி ஒன்றில் விஜய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் “யாருக்கும் தீங்கு நினைக்காத ஒரு நபர்தான் தளபதி விஜய். படப்பிடிப்பில் இயக்குநர் என்ன கூறினாலும் எந்த ஒரு தலைக்கனமும் இல்லாமல் அதை கேட்டு நடிப்பார். அப்போது அவர் நடிகர், இன்று அரசியலுக்கு சென்றுவிட்டார், இன்றும் அவரின் குணம் எதுவும் மாறவில்லை. அவரின் ரசிகர்கள் பலத்தை பார்க்கும்போது பிரமிக்க வைக்கிறது” என கூறியுள்ளார்.

Comments